கோப்புப்படம் 
தமிழ்நாடு

தக்காளி விலை குறைந்து ரூ.60க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி வெள்ளிக்கிழமை ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை உச்சத்தில் இருந்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.210 வரை சிறிய கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாகவே தக்காளி விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. 

விலை உச்சத்தில் இருந்தபோது 20 முதல் 30 லாரிகளில் மட்டுமே சந்தைக்கு வந்தன. ஆனால் கடந்த சில நாள்களாக வரத்து அதிகரித்து வியாழக்கிழமை 40 லாரிகளில் தக்காளி விற்பனைக்காக வந்தது.

இந்த நிலையில், ரூ.210 வரை விற்கப்பட்ட தக்காளியின் விலை குறைந்து வருவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT