தமிழ்நாடு

அவிநாசி அருகே எரிவாயு உருளை வெடித்து தொழிலாளி பலி!

அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் எரிவாயு உருளை வெடித்து வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை பலியானார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

DIN

அவிநாசி: அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் எரிவாயு உருளை வெடித்து வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை பலியானார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. திடீரென நிறுவனத்திற்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானது. இதில்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ்(22) சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT