கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கி சிறுமி பலி

ஆந்திரம் மாநிலம் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

DIN



திருமலை: ஆந்திரம் மாநிலம் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி கோயிலுக்கு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு அலிபிரி மலைப்பாதையில் திருமலைக்கு சென்றுகொண்டிருந்தபோது லட்ஷிதா(6) என்ற சிறுமி பிஸ்கட் பாக்கெட் வாங்குவதாகக் கூறி சில படிகள் முன்னால் சென்றுள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவள் முன்னால் இருப்பதாக நினைத்து குடும்பத்தினர் சென்றுள்ளனர். ஆனால் சிறிது நேரம் கழித்து சிறுமியை தேடியும் காணவில்லை.  

இதையடுத்து தேடுதல் பணியில் ஈடுபட்ட வனத் துறையினர், லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை காலை காயங்களுடன் சிறுமியை சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் சடலத்தை உடல் கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை சிறுத்தை தாக்கி இழுத்து சென்றதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியத்தில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT