தமிழ்நாடு

ஆவின் பச்சை பாலின் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி!

ஆவின் 5 லிட்டர் பச்சை பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

DIN

ஆவின் 5 லிட்டர் பச்சை பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையின் கீழ் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சராசரியாக நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 30 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், ஆவின் விற்பனையகங்களில், 5 லிட்டர் ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

அதன்படி, 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. முன்னதாக 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பாக்கெட் விலை ரூ.210-க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ரூ.10 அதிகரித்து ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

முன்னதாக, பாதாம் மிக்ஸ், பன்னீர் ஆகிய பொருள்களின் விலை உயர்ந்த நிலையில், தற்போது 5 லிட்டர் பச்சை பாலின் விலையும் உயர்வுள்ளது.

ஆவின் பால் விலை உயர்வு அரை லிட்டர், ஒரு லிட்டர் என வாங்கும் இல்லத்தரசிகளை பாதிக்காது என்றாலும் வணிக ரீதியாக வாங்கி பயன்படுத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

பொதுவாக டீக்கடை, உணவகங்களில் 5 லிட்டர் பால் பாக்கெட்டுகளை வாங்கியே பயன்படுத்துகிறார்கள். பால் விலை உயர்வால் டீ, காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தமிழகம் திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்

வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து

SCROLL FOR NEXT