தமிழ்நாடு

சுதந்திர நாள் அணிவகுப்பு இறுதி ஒத்திகை!

சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

DIN


சுதந்திர நாளையொட்டி சென்னை மெரினாவில் அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

76வது சுதந்திர நாளையொட்டி தமிழ்நாட்டில் ஒத்திகை நிகழ்ச்சிகள் கட்ந்த 4ஆம் தேதிமுதல் தொடங்கியது. மொத்தம் மூன்று நாள்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. 

ஏற்கெனவே ஆகஸ்ட் 4, 10 ஆகிய தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (ஆக. 13) அணிவகுப்பு இறுதி ஒத்திகை நடைபெற்று வருகிறது.

கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவல் படை உள்ளிட்ட 7 படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

ஒத்திகைக்காக ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒத்திகை நேரத்தில் நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT