தமிழ்நாடு

விவாதம் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது பாஜக!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் பெயர்களையும் மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளனர். இதன் பொருள் பாமரனுக்கு எப்படி புரியும்? என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். 

DIN

மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை என திமுக எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுவந்ததால் மணிப்பூர் பிரச்னை முடிந்துவிட்டதுபோல் மத்திய அரசு கூறுகிறது.

மணிப்பூர் பிரச்னை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒருநாளும் கவலைப்பட்டதில்லை. ஆடைகளின்றி 2 பெண்கள் அழைத்துச்செல்லப்பட்டது குறித்து உரிய விளக்கம் அளிக்கவில்லை.

மணிப்பூரில் தற்போதும் வன்முறை நடக்கிறது. அதில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கேள்வி கேட்கும் திமுக உறுப்பினர்கள் மீது குறிவைக்கின்றனர். அரசு என்ன செய்தது என்று பேசாமல், அதற்கு பதிலாக எதிர்கட்சி உறுப்பினர்களை முடக்குகின்றனர். 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் பெயர்களையும் மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளனர். இதன் பொருள் பாமரனுக்கு எப்படி புரியும்? எனக் கேள்வி எழுப்பினார். 

மு.க. ஸ்டாலினின் ஒற்றை முயற்சியால் தமிழ்நாட்டில் அத்தனை இடங்களில் வெல்ல முடிந்தது. இந்த நிலையை இந்தியா முழுவதும் ஏற்படுத்த முடியும். மத்திய பாஜக அரசை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...? ஈ.ஆர்.ஈஸ்வரன்

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 7 போ் மீது வழக்கு

உசிலம்பட்டி கோட்டத்தில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT