தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. 
பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட அசோக் குமார் தில்லி அல்லது சென்னைக்கு அழைத்துச் செல்லப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 
செந்தில் பாலாஜி சகோதரர் கட்டிவரும் புதிய வீட்டை கடந்த வாரம் அமலாக்கத்துறை முடக்கியிருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.1.62 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்தியக் குற்றப் பிரிவு கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. 
அதேவேளையில் இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிவா்த்தனை நடைபெற்ாக அமலாக்கத் துறை தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. 
தற்போது அமலாக்கத் துறை, தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT