தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதா: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

DIN


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு, 2021-க்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் துரதிருஷ்டவசமான விளைவுகள் ஏற்படுகின்றன. 

நீட் தேர்வை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலான மருத்துவச் சேர்க்கை, நகர்ப்புற மாணவர்களுக்கும், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெறக்கூடிய 
மாணவர்களுக்குமே சாதகமாக உள்ளது. 

அடிப்படையிலேயே ஏழை எளிய மாணவர்களுக்கு எதிரானதாக இந்தத் தேர்வு முறை உள்ளது.

நீட் போன்ற நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதை விட, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெற வேண்டும். 

நீட் அடிப்படையிலான மாணவர் சேர்க்கை செயல்முறை, ஏழை மற்றும்
கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஆகியவை குறித்து ஆராய்ந்திட, உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர்  ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு விரிவான ஆய்வை மேற்கொண்டு, தீர்வுகள் குறித்த தனது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில், தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டமுன்வடிவு 2021 நிறைவேற்றப்பட்டது. ஆளுநரால் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு இச்சட்டமுன்வடிவு திருப்பி அனுப்பப்பட்டது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் இச்சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு, மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக மாண்புமிகு ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது.  இந்த மசோதாவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி, தற்போது நிலுவையில் உள்ளது.

இச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதால், தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நீட் எதிர்ப்பு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அஞ்சல் துறை போட்டிகள்: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT