முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடரும்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடரும்: 5 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:49 AM
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு திசை காற்றும், தென் மேற்கு திசை காற்றும் சந்தித்ததன் காரணமாகவே மழை பெய்துள்ளது. 

ஆக.14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

ஆக.15, 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இந்தாண்டு இயல்பை விட 6 சதவீதம் மழை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்கள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →