தமிழ்நாடு

மணப்பாறையில் சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம்!

DIN

மணப்பாறை: மணப்பாறையில் 96 வயதான சுதந்திர போராட்ட தியாகி, குடியிருக்க வீடு கட்டித் தர கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 96). சுதந்திரப் போராட்ட தியாகியான இவரின் மகனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், தனது வீடு சேதமடைந்து இடிந்துவிட்டதால் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று சில ஆண்டுகளாக அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளித்து வந்துள்ளார்.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் காமராஜர் சிலை முன்பு கோரிக்கை அடங்கிய பதாகையுடன், உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவலர்கள் மற்றும் வருவாய்துறையினர் காமராஜர் சிலைக்கு சென்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுதந்திர போராட்ட தியாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவரின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த அதிகாரிகள், ஆட்டோவில் சுந்தரத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சுதந்திர நாளன்று சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT