தமிழ்நாடு

தேசியக்கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்கள்: நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கோவை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களை அழைத்து கௌரவித்தனர்.

பின்னர் தூய்மைப் பணியாளர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மைப் பணியாளர்களை  கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT