தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

DIN

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூரில் ஏராளமானோர் கடலில் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும் வழிபட்டனர். இதனால் திருக்கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடாந்து கால சந்தி பூஜையாகி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. 

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் கடலில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடியும், தங்கள் முன்னோர்களுக்கு புரோகிதர் முன்னிலையில் தர்ப்பணம் செய்தும் சுவாமியை வழிபட்டனர். இதனால் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

SCROLL FOR NEXT