தமிழ்நாடு

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத் தாலி கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில்  தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

DIN

வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில்  தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில், அங்கிருந்து 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், இதே இடத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்கப்பட்டு, இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கிருந்து சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி பானை, தோசைக் கல், இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை(ஆக.11) அகழாய்வின் போது, சங்கு கலைப் பொருள்கள் உற்பத்திக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுரம், உருண்டை வடிவிலான மெருகூட்டும் கற்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சல்லடை, பானை உள்பட 10-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதன் மூலம், இங்கு நம் முன்னோா்கள் வசித்ததற்கான ஆதாரமும், அவா்கள் தொழிலில் ஈடுபட்டதற்கான அடையாளமும் கிடைத்திருப்பதாக தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாங்கள் வந்தவுடன் தில்லியே பயப்படுகிறது! - காவல்துறை மீது மமதா குற்றச்சாட்டு

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு!

சுற்றுலா மாநாடு: 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

SCROLL FOR NEXT