தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்ட சுநில் மாத்துர். 
தமிழ்நாடு

வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுநில் மாத்துர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுநில் மாத்துர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜூலை 2021 முதல் சென்னை புலனாய்வுப் பிரிவின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த சுநில் மாத்துர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  அவா், வியாழக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

சுநில் மாத்துர், 1988 ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்ப் பணி (ஐ.ஆர்.எஸ்) அதிகாரி ஆவார். இவர் பிலானியில் பி.இ. (சிவில்) பட்டம் பெற்றவர். மேலும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் "பொது நிர்வாகத்தில்" 2014-15 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர்.

குஜராத், ராஜஸ்தான், தில்லி, கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வருமான வரித் துறையின் பல்வேறு பதவிகளிலும், பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்

வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT