கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஓணம் பண்டிகை: தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள்

ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

DIN

ஓணம் பண்டிகையையொட்டி தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

ஓணம் பண்டிகை மற்றும் ரயில் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - எா்ணாகுளம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பா் 7ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மாலை 3 மணிக்கு புறப்படும் தாம்பரம் - எா்ணாகுளம் சிறப்பு வாராந்திர ரயில் (எண்:06053) மறுநாள் காலை 3.30 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும். ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பா் 8ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் எா்ணாகுளத்தில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் ( எண்: 06054) அன்று இரவு 11.15 மணிக்கு தாம்பரம் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், எழும்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி

பாகிஸ்தானுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுத்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு: முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT