வானிலை ஆய்வு மையம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஆக.22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும். அதேசமயம் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும். அதேசமயம் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 

ஆக.17 முதல் 22 வரை.. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை

இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். 

சென்னையை பொருத்தவரை.. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்கள் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

மீனவர்கள் இந்த நாளில் கடலுக்குள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT