அரசுப் போக்குவரத்துக் கழக இணையதளம் முடங்கியது ஏன்?
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியது.
சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் இணையதளத்தை நாடியதால் இணையதளம் முடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. கையின் கட்டைவிரலானது கால் விரல்: மருத்துவர்கள் சாதனை
முன்னதாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு http://www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 18ஆம் தேதி மதியம் 1 மணி முதல் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதையும் படிக்க.. சென்னை - பெங்களூரு வெறும் 4 மணி நேரத்தில்.. அதுமட்டுமா?
இதையடுத்து, விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே, பிற்பகல் 1 மணிக்கு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க ஏராளமானோர் இணையதளத்தை அணுகியதால் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கும் நிலையில், ஒரே நாளில் இணையதளம் முடங்கியது, விண்ணப்பிக்க முயன்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.