தமிழ்நாடு

லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதி வெடித்து சிதறியது: ஓட்டுநர் உள்பட 6 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியது. இதில் டிரைவர் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

DIN

காஞ்சிபுரம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியது. இதில் டிரைவர் உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். 

காஞ்சிபுரம் அருகே பெரும்புலிப்பாக்கம் கிராமத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கிருஷ்ணகிரியில் இருந்து நோயாளியை ஏற்றுக்கொண்டு சென்னை சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் மற்றும் நோயாளி உள்பட ஆறு பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலை ஓரமாக காவல்துறையினர் நிறுத்திய அரை மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தீப்பிடித்து ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியது. சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் வெடித்து சிதறியதில் வாகனத்தின் பாகங்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

இந்த சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: சிறப்புக் குழு விசாரணை தொடக்கம்!

விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

தமிழ்நாட்டை நாசப்படுத்த துடிக்கும் கூட்டத்தை வீழ்த்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!

உக்ரைன் பயணியர் ரயில் மீது ரஷியா தாக்குதல்! ஒருவர் பலி; 30 பேர் காயம்!

SCROLL FOR NEXT