தமிழ்நாடு

சென்னையில் சாலையில் சொகுசு கார் தீப்பிடித்து எரிந்தது!

சென்னை பல்லாவரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கார் தீப்பிடித்து எரிந்தது.

DIN

சென்னை: சென்னை பல்லாவரம் அருகே ஜிஎஸ்டி சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கார் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபரல ஜவுளி கடைக்கு தனது உரிமையாளருடன் காரை ஓட்டுநர் செல்வம் ஓட்டி வந்துள்ளார்.

"ஜவுளிக் கடையில் உரிமையாளரை இறக்கிவிட்டு, பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தச் சென்ற போது, ஓட்டுநர் காரின் முன்பக்கத்தில் (பானட்) புகை வருவதைக் கண்டுள்ளார்." 

இதையடுத்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால் ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT