சென்னை மற்றும் புறநகரில் மழை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்படி அசோக் நகர், வட பழனி, கிண்டி, அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கி வருகிறது. திடீரென பெய்து வரும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் பணி முடிந்து வீடுகளுக்கு திரும்புபவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர்.
இதனிடையே தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இரவு 11 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.