தமிழ்நாடு

நீட் தேர்வு: திமுக உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்!

DIN


நீட் தோ்வு ரத்து கோரி திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் இன்று (ஆக. 20) தொடங்கியது.

அதிமுக மாநாடு நடைபெறும் மதுரை தவிர மற்ற அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் தொடங்கியது. 

திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. 

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

போராட்டத்தின் தொடக்கத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் படங்களுக்கு அமைச்சர்கள்  துரைமுருகன், உதயநிதி உள்ளீட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் பங்கேற்றுள்ளனர். 

மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர். இந்தப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

மரமாகக் கடவேனோ..!

SCROLL FOR NEXT