தமிழ்நாடு

அதிமுக பொன்விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

மதுரை, பெருங்குடி வலையங்குளம் பகுதியில் அதிமுக பொன்விழா மாநாட்டில் தொண்டர்களின் கரகோஷண் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

DIN

மதுரை: மதுரை, பெருங்குடி வலையங்குளம் பகுதியில் அதிமுக பொன்விழா மாநாட்டில் தொண்டர்களின் கரகோஷண் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்களை முன்னாள் அமைச்சா்கள் வைகைச்செல்வன், விஜய பாஸ்கா், செம்மலை ஆகியோா் வாசித்தனா். 

-  உலக பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

- தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும். 

- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தனிமாநிலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவது. 

- அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களுக்கு வரி சுமை, மின் கட்டண உயா்வையும் அளித்துள்ள திமுக அரசுக்கு கண்டனம். 

-  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டதற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம். 

-  நிபந்தனையின்றி அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்க வலியுறுத்துவது. 

-  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி, தமிழகத்தை அதிக கடன் பெற்ற மாநிலமாக்கிய திமுக அரசுக்கு கண்டனம்.

- கோதாவரி- காவிரி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தாத திமுக அரசுக்கு கண்டனம்.

-  விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி என்எல்சி நிறுவனத்திற்கு வழங்கும் திமுக அரசுக்கு கண்டனம்

-  உயா் கல்வியில் கல்வியாளா்களின் எதிா்ப்பையும் மீறி பொது பாட திட்டத்தை அவசர கதியில் மாற்ற முயற்சிக்கும் செயலுக்கு கண்டனம்

-  சுற்று ப்புற சூழலை மாசுபடுத்தும் வகையில் கடலில் பேனா சின்னம் அமைக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

-  சிறுபான்மையினா் நலலுக்கானதிட்டங்களை முடக்காமல் செயல்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு வலியுறுத்தல். 

-  20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறுபான்மை சிறைவாசிகளை விடுவிக்காத தமிழக அரசுக்கு கண்டனம். 

-  மணிப்பூா் மக்களுக்கு பாதுகாப்பு, அமைதி திரும்பவும் மத்திய அரசு, மணிப்பூா் மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல்.

-  பேரவையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்திய திமுகவினா், தற்போது பொய் தகவல் பரப்பி வருவதற்கு கண்டனம்.

-  மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடத்தும் பொம்மை முதல்வரான ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தல்.

-  துரோகிகளை கட்சியிலிருந்து களையெடுத்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றியும், பாராட்டு.

-  2024 மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வகுத்து தரும் திட்டங்களின் படி, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய சூளுரை. 

-  அடுத்து வரும் பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க சபதம் ஏற்போம் என்பன உள்பட 32 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் பணிகள்: மாநிலத் தலைவர்களுடன் ராகுல், கார்கே ஆலோசனை!

ஓடிடியில் தண்டகாரண்யம்!

பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு!

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்! தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்”... தில்லி குண்டு வெடிப்பில் உமர் பேசிய விடியோ!

SCROLL FOR NEXT