தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது: தமிழக அரசு பதில்

DIN

ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான தடையை எதிர்த்து தில்லி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதில், “வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையான விதிமுறைகளைகூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை!

என்னுடல் ஒத்துழைக்காத போதிலும் தீவிரமான கிரிக்கெட் பயிற்சி செய்தேன்: ஜான்வி கபூர் உருக்கம்!

கேத்ரின் ஆட்டம்!

"நான் இந்து, முஸ்லீம் என பேசியதே இல்லை”: பிரதமர் மோடி!: செய்திகள்: சிலவரிகளில் | 15.05.2024

ராஜஸ்தான் பேட்டிங்: முதலிடத்துக்கு முன்னேறுமா?

SCROLL FOR NEXT