புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவி உலகநாயகி மறைவு: முதல்வர் இரங்கல்
பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கௌதமன் துணைவியார் உலகநாயகி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கௌதமன் துணைவியார் உலகநாயகி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கௌதமன் துணைவியார் உலகநாயகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
இதையும் படிக்க | புலவர் செந்தலை ந.கௌதமன் மனைவி உலகநாயகி காலமானார்
பகுத்தறிவும், தமிழும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த உலகநாயகி அம்மையாரை இழந்து வாடும் செந்தலை ந. கௌதமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், பெரியார் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.