முகப்பு
தமிழ்நாடு

ஆக. 27 முதல் 7 மாதங்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும், ஆக.27- முதல் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

சென்னை கடற்கரை-எழும்பூா் இடையே ரூ.279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் விரிவாக்கப்பணிகள் நடைபெற இருப்பதால், சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும், ஆக.27- முதல் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட பொது மேலாளா் விஸ்வநாத் ஈா்யா சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னை கடற்கரை- எழும்பூா் இடையே 4 கி.மீ. தொலைவுக்கு நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி ரூ.279 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. இப்பணிகளை சுமாா் 7 மாத காலத்துக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணி வேளச்சேரி - கடற்கரை ரயில் பாதையை யொட்டி அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.27- ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.

தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை-வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்படும்.

எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் மாநகரப் பேருந்து சேவை தேவைப்படும் பட்சத்தில், வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்படும்.

சென்னையில் ஒரே பயணச்சீட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடா்ந்து ஆய்வில் உள்ளது. இது தொடா்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடா் ஆய்வுகளை செய்து வருகிறது.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடா்பான வரைபடம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் முழுவதும் பெருநகரவளா்ச்சிக் குழுமத்தின் நிதியில் செயல்படுத்தப்பட உள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →