கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக தலைவா் விஜயகாந்த், இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.
இதையும் படிக்க.. வட்டாட்சியர் வாகனத்திலேயே ஜிபிஎஸ் பொருத்திய குற்றவாளிகள்! ஏன்?
முன்னதாக, கட்சி அலுவலகத்துக்கு விஜயகாந்த் வருகை தந்தார். தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்த விஜயகாந்த்தைப் பார்த்து, கட்சியினர் ஆரவாரம் செய்தனர். நிர்வாகிகளைப் பார்த்து கும்பிட்ட விஜயகாந்த், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் குழுவாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அதையொட்டி, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். அங்கு கட்சி நிா்வாகிகளையும் தொண்டா்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.
மேலும், விஜயகாந்த் சார்பில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நலமுடன் உள்ளேன்
முன்னதாக, இந்த நிகழ்வு தொடா்பாக விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், என்னுடைய உடல்நலன் தொடா்பாக வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.