தமிழ்நாடு

அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்த்தி அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத்தை தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN


சென்னை: அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத்தை தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கல்லூரி, பல் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஈடுகட்ட உதவும் வகையில் கல்வி முன்பணம் என்ற வட்டியில்லா முன்பணம் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. அதில் அரசு ஊழியர்களின் மாத அடிப்படை சம்பளம் அல்லது கல்வி முன்பணம் இதில் எது குறைவோ என்ற வரம்பின் அடிப்படையில் பெறலாம் என அரசு அரசாணை வெளியிட்டது. 

அரசாணை வெளியிடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது தற்போது உயர்த்தி வழங்க அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தொழில்முறை கல்விக்கு ரூ.50 ஆயிரம், கலை-அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில்வோருக்கு ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT