குற்றாலம் பேரருவிக்கு அருகேயுள்ள தற்காலிக கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவிக்கு செல்லும் வழியில் குற்றாலநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடையில் சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் தீக்கரையாயின.
இதையும் படிக்க: பிகார்: கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி பலி
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, கடையநல்லூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.