தமிழ்நாடு

ஆழ்வார்குறிச்சியில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஹோட்டல் தொழிலாளி தவறி விழுந்ததில் பலியானார்.

DIN

அம்பாசமுத்திரம்: ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஹோட்டல் தொழிலாளி தவறி விழுந்ததில் பலியானார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமையா மகன் ராஜீவ் காந்தி (37). இவர் திருநெல்வேலியில் தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்ற ரயிலில் ஆழ்வார்குறிச்சி ரயில் நிலையத்தில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி தண்டவாளத்தில் தவறி விழுந்ததில் ரயிலில் அடிபட்டு ராஜீவ் காந்தி  சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜீவ் காந்திக்கு திருமணமாகி மாரி செல்வி என்ற மனைவியும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தென்காசி ரயில்வே போலீசார் மற்றும் ஆழ்வார்குறிச்சி போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT