தமிழ்நாடு

ரயில் பெட்டி தீ விபத்தில் 9 பேர் பலி: ஆளுநர் இரங்கல்

DIN


மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னௌவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலில் 180 பயணிகள் கடந்த 17 ஆம் தேதி தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு சனிக்கிழமை அதிகாலை 5.15 மணி அளவில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் வந்த சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் மதுரை போடி வழித்தடத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ரயில் பெட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.

இந்த நிலையில், ரயிலில் இருந்த பயணிகளில் சிலர் டீ, சமையல் செய்வதற்காக சிலிண்டரை பற்ற வைக்க முயன்ற போது அந்த பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில் பெட்டி தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ரயில் பெட்டி தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. 

என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிரி... சிரி...

ராஜஸ்தானை வீழ்த்திய சிஎஸ்கே; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக கோபம் நீங்க.. ?

கருணாவும், காஞ்சிபுரம் இட்லியும்!

திரைக்கதிர்: பாலிவுட் ரவுண்ட் அப் !

SCROLL FOR NEXT