iphone072906 
தமிழ்நாடு

ஆப்பிள் ஐஃபோன் 15-ன் சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், ஐபோன் 15 வகை கைப்பேசி இன்னும் ஒரு சில வாரங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

DIN

ஐபோன் 15 வகை கைப்பேசியை இன்னும் ஒரு சில வாரங்களில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்.

ஆனால் அது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அது மட்டுமல்ல, ஐஃபோன் 15 வகை கைப்பேசியின் சிறப்பம்சங்கள், கூடுதல் வசதிகள் பற்றிய தகவல்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஐஃபோன் 15 வகை கைப்பேசியில், மிக வேகமாக சார்ஜ் செய்யும் வசதி, பல புதிய நிறங்கள் என இளைஞர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஐஃபோன் 15 பற்றி கசிந்திருக்கும் சில தகவல்கள்..

ஆப்பிள் ஐஃபோன் 15 வகை கைப்பேசி, அதன் தனித்துவமான மாடல்களுக்கு ஏற்ப பல சிறந்த வண்ணங்களில் அறிமுகமாகவிருக்கிறதாம். ஐஃபோன் 15 ப்ரோ மாடலில், அடர் சிவப்பு நிறம் அறிமுகப்படுத்தப்பட்டது போல, ஐஃபோன் 15 மாடலில், பச்சை நிறம் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஃபோன் 15 வகையில் ஏ15 பையோனிக் சிப் பயன்படுத்தப்பட்டது, பிரோ வகை மாடல்களில் ஏ16 பையோனிக்  சிப் பயன்படுத்தப்பட்டது போல, ஐஃபோன் 15 மாடலிலும் அதுபோன்ற பேட்டர்ன் பயன்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஐஃபோன்15 மாடலில், ஆப்பிள் நிறுவனம் 3500 மெஹா ஹர்ட்ஸ் திறன் கொண்ட பேட்டரி மற்றும் 6,000 மெஹா ஹர்ட்ஸ் திறன் கொண்ட போர்டை இணைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், பேட்டரிகளின் ஆயுள் கூடும் என்றும் கூறப்படுகிறது. 

கேமராவை எடுத்துக் கொண்டால், மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஃபோன் 14 ப்ரோ வகை கைப்பேசிகளில் 48 மெகா ஃபிக்சல் சென்சார் கொண்ட கேமரா இணைக்கப்பட்டிருந்தது. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஒட்டுமொத்த ஐஃபோன் 15 வகை கைப்பேசிகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்த கைப்பேசிகளில் சென்சார் வசதி அப்கிரேட் செய்யப்படலாம்.

அறிமுகப்படுத்தப்படும் தேதி
ஆப்பிள் ஐஃபோன் 15 அறிமுகமாகும் தேதியை ஆப்பிள் நிறுவனமானது செப்டம்பர் 15ஆம் தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஆப்பிள் நிறுவனமானது ஐஃபோன் வகைகளை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இந்த தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

எத்தனை வகைகள்..
ஐஃபோன் 15 வகை கைப்பேசியில் இரண்டு ஐஃபோன் 15 ப்ரோ வகையிலும், இரண்டு ஸ்டான்டர்ட் வகையும் இருக்கலாம். அதாவது ஐஃபோன் 15, ஐஃபோன் 15 பிளஸ், ஐஃபோன் 15 ப்ரோ, ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் என 4 வகைகளில் வெளியிடப்படலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT