முகப்பு
தமிழ்நாடு

நீச்சல் குளத்தில் சிறுவன் பலி - முதல்வர் நிதியுதவி

அண்ணா நீச்சல்குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

அண்ணா நீச்சல்குளத்தில் நீரில் மூழ்கி பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளித்திட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல்குளத்தில் நேற்று (26-8-2023) மதியம் குடும்பத்தினருடன் நீந்துவதற்கு வந்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அனிருத் என்ற ஐந்து வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன்.

சிறுவன் அனிருத்தை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →