முகப்பு
தமிழ்நாடு

தேசிய நல்லாசிரியர் விருது - ஆளுநர் ரவி வாழ்த்து

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:09 PM
பகிர்:

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியை மாலதி, ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கல்வித் துறையில் அசாதாரண முயற்சி & பங்களிப்புக்காக தேசிய நல்லாசிரியர் விருது 2023-க்கு தேர்வான திருமதி எஸ்.மாலதி, அரசு மேல்நிலை பள்ளி, வீரகேரளம்புதூர்,  டாக்டர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, அலங்காநல்லூர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5- ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியா் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், அதையொட்டி தேசிய நல்லாசிரியா் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நிகழாண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது. நிகழாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியா் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ்.மாலதி ஆகிய இருவரும் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விருதுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியா்களுக்கும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செப். 5- ஆம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியா் விருதை வழங்கவுள்ளாா்.

இந்த விருது பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை ஆகியவற்றை உள்ளடக்கியது. மாணவா் சோ்க்கை, பள்ளி சுற்றுச்சூழல் மேம்பாடு, புதுமையான கற்பித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியா்களுக்கு தேசிய நல்லாசிரியா் விருது வழங்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →