முகப்பு
தமிழ்நாடு

ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
பகிர்:

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

திமுக எம்.பி. கனிமொழியை அவதூறாகப் பேசியது, அறநிலையத்துறை அதிகாரிகளைப் பேசியது மற்றும் பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளன. 

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ஹெச். ராஜா மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் அவர் தொடர்பான வழக்குகளை 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 

முழு கட்டுரையைப் படிக்க →