வார இறுதி நாளில் 400 பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களில் பயணிகள் வசதிக்காக சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.
வார இறுதி நாள்களில் பயணிகள் வசதிக்காக சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூடுதலாக 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படஉள்ளன.
இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் கே.இளங்கோவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் இருந்து பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 200 பேருந்துகள் என 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், வார இறுதி நாள்களில் பேருந்துகளில் பயணிக்க இது வரை 11,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.