தமிழ்நாடு

தூத்துக்குடி வாகன உதிரிபாக விற்பனைக் கடையில் தீ விபத்து!

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

DIN

தூத்துக்குடியில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் உள்ள இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வியாழக்கிழமை காலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பல லட்சம் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் 3 மாடி கட்டடத்தில் இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்தக் கடையில் இன்று காலையில் திடீரென தீ பிடித்தது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும், மத்திய பாகம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கடையில் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் இருந்ததால், தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, சோப்பு நுரை கலந்த திரவம் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலான போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் வந்தது.

இந்த தீ விபத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான இருசக்கர வாகன உதிரி பாகங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT