தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட சிலை

DIN

மெரினா கடற்கரை மண்ணில் புதைத்து இருந்த கற்சிலையைக் கண்டுபிடித்து மெரினா காவல்துறையினர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிலையைக் கைப்பற்றிய, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் மண்ணில் புதைந்து இருந்த ஒரு அடி உயரம் உள்ள கற்சிலையை மீனவ மக்கள் கண்டெடுத்தனர். பின்னர் மெரினா காவல்துறையினருக்கு மீனவ மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெரினா காவல்துறையினரிடம் மீனவ மக்கள் கற்சிலையை ஒப்படைத்ததாக  கூறப்படுகிறது.

பின்னர் மெரினா கடற்கரை காவல்துறையினரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் மெரினா கடற்கரை இடத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கற்சிலை எத்தனை ஆண்டு பழமையானது, எப்படி கடற்கரை மண்ணில் புதைக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் யார் இந்த கற்சிலையை புதைத்து வைத்துள்ளனர், எதற்காக  புதைக்கப்பட்டது என்றும் தீவிர விசாரணையை  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினல் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

‘பட்டாம்பூச்சி’ தீப்தி சுனைனா!

SCROLL FOR NEXT