தமிழ்நாடு

சொந்த ஊரில் நடிகர் ரஜினி! பெற்றோர் நினைவிடத்தில் மரியாதை

நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்திற்கு வருகை தந்துள்ளார். 

DIN

நடிகர் ரஜினிகாந்த் தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்திற்கு வருகை தந்துள்ளார். 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் அக். 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

அதற்கு முன்னதாக இமயமலை சென்ற ரஜினி, தமிழ்நாடு திரும்பும் வழியில் அரசியல் தலைவர்களைச் சந்தித்தார். 

தொடர்ந்து இரு நாள்களுக்கு முன்பு பெங்களுருவில் ஜெயநகரில், தான் பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய பணிமனைக்குச் சென்று, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களை சந்தித்துப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாக தனது பூர்வீக ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு ரஜினி இன்று வருகை தந்துள்ளார்.

தனது சகோதரர் சத்யநாராயண ராவுடன் சேர்ந்து நாச்சிக்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் நினைவிடத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். 

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

சீன ராணுவத்தின் பிரம்மாண்ட அணிவகுப்பு!

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

SCROLL FOR NEXT