தமிழ்நாடு

விராலிமலை அருகே சாலை விபத்து: 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி!

விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

DIN

விராலிமலை:  விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கார் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியத்தை சேர்ந்த சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52), கிருஷ்ணபுரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யூ(52), நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஆகிய நான்கு பேர் வியாழக்கிழமை சென்னையில் நடைபெறும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பிலான பேரணியில் பங்கேற்பதற்காக  வாடகை காரில் சிவகாசியில் இருந்து புதன்கிழமை மாலை புறப்பட்டுள்ளனர். காரை பாஸ்கர்(53) ஓட்டியுள்ளார்.

இவர்கள் வந்த கார் விராலிமலை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள வானத்திராயன்பட்டி பிரிவு சாலை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதியுள்ளது.

இதையடுத்து ஓட்டுநர் இடதுபுறமாக வண்டியை திருப்பிய போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், சங்கமம் நாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி (52), கிருஷ்ணபுரி ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்யூ (52) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இவ்விபத்தில் நடுவப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (52), நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரம் (55) ஓட்டுநர் பாஸ்கர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸார் நிகழ்விடம் சென்று காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து ஓட்டுநரான பெரம்பலூர் மாவட்டம், அனுப்பூர் வெப்பந்தட்டையைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஜெயவேலை(45) காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

SCROLL FOR NEXT