தமிழ்நாடு

தூத்துக்குடியில் பால் வியாபாரி வெட்டிக் கொலை 

தூத்துக்குடி மேலோட்டான் பகுதியில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி மேலோட்டான் பகுதியில் பால் வியாபாரி மர்ம நபர்களால் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி மேல தெருவைச் சேர்ந்த ஆத்திமுத்து மகன் நந்தகுமார் (25). பால் வியாபாரியான இவர் வழக்கம்போல் பால் வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். இவர், மீள விட்டான் சாலையில் இருந்து பண்டாரம்பட்டி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,  அவரை 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் நந்தகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதில் பலத்த காயமடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார்,  நந்தகுமார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT