தமிழ்நாடு

9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது

DIN

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை அடுத்து கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. அதோடு தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு, அதாவது வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி வரை, சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இந்தநிலையில், சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி, பாம்பன், காட்டுப்பள்ளி,புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் வெள்ளிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமது கருத்து மற்ற மதத்தினரை அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது: மோகன் பாகவத்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு! எங்கே? எப்படி?

காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

நெருப்பில் குளிக்கும் தெய்வம்... காந்தாரா சாப்டர் - 1 திரை விமர்சனம்!

பாமக இளைஞரணி தலைவராக தமிழ்குமரன் நியமனம்!

SCROLL FOR NEXT