தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சென்னையில் வெள்ளிக்கிழமை(டிச.1) காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக நேற்று ஒரு கிராம் ரூ.5,865-க்கும், ஒரு சவரன் ரூ.46,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க |பெங்களூரு : 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அதேபோன்று, வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.82.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.82,500-க்கும் விற்பனையாகிறது.