தமிழ்நாடு

நாளை தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்

DIN

நாளை தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது.

வங்கக் கடல் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்  மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தனியார் நிறுவனங்களுக்கு நாளை(டிச.3) விடுமுறை அளிப்பது தொடர்பாக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் நலன்கருதி முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மிக்ஜாம் புயலால் கனமழையுடன், 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT