முகப்பு
தமிழ்நாடு

பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

 புயல், பலத்த மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:21 PM
பகிர்:

 புயல், பலத்த மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும், தொலைநிலைக் கல்வியிலும் பயின்று வருவோருக்கு வரும் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

இதே போன்று, சென்னை பல்கலைக்கழகத்திலும் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட மாணவா்களுக்கு டிச.8 வரை நடைபெறவிருந்த தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகள் நடைபெறும் மாற்றுத் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →