தமிழ்நாடு

கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகள் திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் சுவாமி கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை பூசாரி விளக்கேற்ற வந்தபோது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மா்மநபா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த சூலத்தால் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடுவது பதிவாகி இருந்தது.

இந்தப் பதிவுகளை கொண்டு வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் மேகவெடிப்பு: 6வது நாளில் பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்: ககிசோ ரபாடா விலகல்!

கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

SCROLL FOR NEXT