கோப்புப்படம் 
தமிழ்நாடு

’அரசுடன் தன்னார்வலர்கள் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’: முதல்வர்

மிக்ஜம் புயலால் உருவான பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தன்னார்வலர்களை அழைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

DIN

மிக்ஜம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

பள்ளமான பகுதிகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், அத்தியாவசிய பொருள்களுக்காக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீரில் மூழ்கின. பல வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

தொடர் மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரிடர் மீட்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “வரலாறு காணாத மழையைக் கொட்டித் தீர்க்கும் இந்த மிக்ஜம் புயலின் பேரிடரிலிருந்து மீள, அரசுடன் அனைத்து அரசியல்கட்சிகளும், தன்னார்வலர்களும் கைகோத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த, 13 அமைச்சர்களை நியமித்துள்ளேன். கூடுதலான பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சவாலான இந்தப் பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டு உதவிகள் செய்வோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT