கோப்புப்படம் 
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பரங்கிமலை மெட்ரோ நிலையத்தைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முன்புறம் உள்ள சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ரோகினி திரையரங்கள் அருகேயுள்ள நடை மேம்பாலம் மூலம் கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை அடையலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், அரும்பாக்கம் மெட்ரோ நிலையம் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அரும்பாக்கம் மெட்ரோ நிலையத்துக்கு செல்வதில் சிரமம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு எஸ்டேட்(Government Estate) மெட்ரோ நிலையத்தில், வாலாஜா சாலை அருகேயுள்ள நுழைவு மூடப்பட்டுள்ளதால், மற்ற நுழைவுகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் தாக்குதல்களைத் தொடரும் இஸ்ரேல்.. பாலஸ்தீன மக்கள் 12 பேர் பலி!

தமிழக அரசு விருது கிடைக்காத விரக்தியில் விடியோ வெளியிட்ட சிறுவன் அஸ்வந்த்!

நள்ளிரவு 2 மணிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்தால்.. மலிவாக இருக்கும் என்பது உண்மையா?

மகாராஷ்டிரத்தின் முதல் பெண் துணை முதல்வராகும் சுநேத்ரா பவாா்..! இன்று மாலை பதவியேற்பு!

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம்!

SCROLL FOR NEXT