பட உதவி - எக்ஸ்! 
தமிழ்நாடு

’விவரிக்க வார்த்தைகள் இல்லை..’: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையில் பெய்து வரும் கனமழையை விவரிக்க, வார்த்தைகள் இல்லையென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

DIN

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சென்னையில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகரப் பகுதிகளுக்கு உள்பட்ட 14 சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரி மற்றும் கடலோரப் பகுதிகளில் மழையளவு அதிகமாக காணப்படுகின்றது.

இந்நிலையில், வானிலை ஆய்வு நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் எக்ஸ் தளத்தில், “இந்த மோசமான நிலைமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. புயல் சென்னைக் கடற்கரையை மேய்ந்துகொண்டிருக்கிறது. மேற்கு மேகங்கள் பிடிவாதமாக உள்ளதால் இன்று இரவு வரை கனமழை தொடரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிறப்பு சான்றிதழில் பெயா் சேர்க்க அவகாசம்!

மகாராஷ்டிர துணை முதல்வராக சுநேத்ரா பவார் பதவியேற்பு

94 வயதில் புதிய திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்!

மார்ச் 15-ல் தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு: திமுக

உலகம் முழுவதும் உதவித் தொகையுடன் கோடைக்கால சிறப்பு படிப்புகள்!

SCROLL FOR NEXT