மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம்: அமைச்சர் தங்கம் தென்னரசு
மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்காணித்து வருகிறார். இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
"பாதுகாப்பு நலன் கருதி மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.
Advertisement
Advertisement
மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும்.
இதையும் படிக்க: இருளில் மூழ்கிய சென்னை! பெருந்துயரில் மக்கள்!
சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.