தமிழ்நாடு

சென்னையைவிட்டு விலகத் தொடங்கியது மிக்ஜம் புயல்!

DIN


சென்னை: சென்னையைவிட்டு மிக்ஜம் புயல் விலகத் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் இன்று முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெற்றது.

இந்தப் புயல் ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே நாளை முற்பகலில் கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து.

இன்று பகல்வரை சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவு வரை நெருங்கி வந்த நிலையில், ஆந்திரக் கரையை நோக்கி தற்போது நகர்ந்து வருகின்றது.

தற்போது சென்னையைவிட்டு விலகி 120 கி.மீ. வடக்கு திசையிலும், நெல்லூருக்கு தென்கிழக்கில் 80 கி.மீ. தொலைவிலும் புயல் நகர்ந்து வருகின்றது.

இதன்காரணமாக தென் ஆந்திர மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மேலும், சென்னையைவிட்டு புயல் விலகத் தொடங்கியுள்ளதால், நள்ளிரவு முதல் மழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT